நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Sunday, March 10, 2013

கடினமான (தகாத, கெட்ட) வார்த்தை.





http://farm8.staticflickr.com/7183/6846078948_0eaae1daa0_m.jpg
ஒருமுறை சென்னை கடற்கரையில்
ஒரு பொதுக்கூட்டத்தில் இரண்டு மணி நேரம்
அண்ணல் காந்தியடிகள் பேசினார்.

அவரைக் கண்டித்து
பாரதியார் ஒரு கடிதம் எழுதினார்.

"Mr. Gandhi' என்று அந்தக் கடிதத்தைத் தொடங்கி,
"நேற்று சென்னை கடற்கரை கூட்டத்தில்
நன்றாகப் பேசினீர்கள். ஆனால், உங்கள்
தாய்மொழியில் பேசியிருக்கலாம்.
அதை விடுத்து ஆங்கிலேயர்களை
விரட்ட வேண்டும் என்ற
எண்ணம் கொண்ட தாங்கள்
ஆங்கிலத்தில் பேசியது மன வருத்தமாக
உள்ளது.' என்று கடிதத்தை முடித்திருந்தார்.

அதற்கு காந்தியடிகளின் பதில்...

"வணக்கம்.
உங்கள் கடிதத்தைப் பார்த்து
சிந்தித்துப் பார்த்தேன். ஆங்கிலேயரை
எதிர்க்கும் நான் ஆங்கிலத்தில் பேசியது
தவறுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
மன்னிப்புக் கேட்கவும் தயார். ஆனால்,
நீங்கள் என்னைக் கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை
ஆங்கிலத்தில் எழுதியிருப்பது
வியப்பாக உள்ளது' என்று கடிதம் எழுதினார்.

அதற்குப் பதிலாக,
"நான் யாரையும் கண்டித்துக் கேட்கும்போது
எழுதுகின்ற கடினமான வார்த்தைகளை
தமிழில் எழுத விரும்பவில்லை.
அதனால்தான்
ஆங்கிலத்தில் எழுதினேன்' என்று மகாத்மா காந்திக்கு
பதில் கடிதம் எழுதியிருந்தார் பாரதியார்.

0 கருத்துரைகள்:

Post a Comment