நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, February 22, 2012

ஒரு நாள் அட்டவணை :

(உயர்தர?) தனியார் பள்ளிகள் 100/100 எடுக்கும் முயற்சியில் பிழிந்தெடுக்கிறார்கள். பத்தாவது, பிளஸ் 2 படிக்கிற மாணவ மாணவிகள் ஒரு நாள் அட்டவணை :

1. அதிகாலை மூன்று மணிமுதல் ஆறு மணிவரை - முழுக்க முழுக்க மனப்பாடம் / ஒப்புவித்தல்.(கெமிஸ்ட்ரி, பயாலஜி மனப்பாடம் செய்ய்யப்படுவதை சற்றே நினைத்துப்பாருங்கள்).

2. பள்ளியில் செய்ய்யப்படும் கொடுமை தெரியும். தன் மகனையோ மகளையோ திடீரென உடல் நிலை சரியில்லைஎன்று போன் வந்தால் அழைத்துவரப்போயிருக்கிறீர்களா? இப்போது காட்சிகளை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். வகுப்பு வாசலில் பெண்ணென்றும் பாராமல் முட்டிப்போட்டு படித்துக்கொண்டிருப்பது, வகுப்பறைகளைக் கடக்கும் தருணங்களில் ஸ்கேலால் விளாசும் சத்தம், போதாக்குறைக்கு பிரேயர், என்சிசி என்று கிரவுண்டில் நிற்க வைப்பது, வெயிலில் ஓடவிட்டு தண்டனை கொடுப்பது, சக மாணவர்கள் முன்னால் அவதூறாகப் பேசி அடிப்பது, பெற்றோர்களை வரவழைத்துத் திட்டுவது...

3.வியர்வையில் தொப்பையாய் நனைந்து பள்ளி வேனிலிருந்து வெளியில் விழுந்தவுடன் டியூஷன்களுக்கு ஓடவேண்டும்..

4. பேனா மை தீர்ந்துபோகக்கூடிய அளவுக்கு ஹோம் வொர்க் எழுத வேண்டும். எழுதிக்கொண்டே பெற்றோர்களிடம் தினந்தோறும் பூசை வாங்க வேண்டும்.

5. திரும்பவும் அதிகாலை மூன்று மணி.

மனசாட்சி தொட்டு சொல்லுங்கள். இல்லை என்பீர்களா?

100க்கு 90 சதவீதத்தினர் சந்தோஷமான மன நிலையில் பள்ளிக்கூடம் செல்லவில்லை; சந்தோஷமாகவும் வீட்டுக்கு வருவதில்லை.

மதிப்பெண் துறத்தும் மன அழுத்தத்தால், தனியார் பள்ளிகள்தான் நல்வாழ்வு பெறும்!

கூடவே கொலைகளும் கொலைகளும் அதிகரிக்கும்!!

0 கருத்துரைகள்:

Post a Comment