அன்பர்களே ....
நம் இந்திய திரு நாட்டின் பண்டைய கல்வி முறை குருகுலத்தை சார்ந்து இருந்தது... மாணவர்கள் குருவின் வீட்டிலேயே தங்கி படித்துவந்தார்கள்...
பின்னர் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நம் கல்வி முறையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தற்போது இருக்கும் மெக்காலே முறைக்கு---முற்றிலுமாக நம்மை மாற்றி அதற்கு நம்மையும் அடிமை ஆக்கிவிட்டார்கள்.....
இப்போது எல்லாம் மதிப்பெண்,,மதிப்பெண்,...மதிப் பெண்.....
செயல் வழி கற்றல் என்று ஆரம்பித்தார்கள்....அது எந்த அளவுக்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது ..????
அன்பர்களே..பொதுவா நம் எல்லாருடைய எண்ணமும்... நமது குழந்தைகள்...மதிப்பெண் நிறைய வாங்கவேண்டும்.. வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்...இது மட்டும் தான்.
நம்மில் எத்தனைபேர்...விடைத்தாளில்...வா ந்தி எடுப்பதை.. ஒத்துக்கொள்கிறீர்கள்???
இது எல்லாம் சுத்த வேஸ்ட் ... பாட பகுதியை மனனம் செய்து அதை அப்படியே விடைத்தாளில் கக்குவதற்கு எதற்கு...பள்ளி...??? பள்ளி கட்டணம்..??? படிப்பவை கடைசி வரை நினைவில் நிற்குமா ??? இதை நாம் வீட்டிலேயே செய்ய சொல்லலாம்...
இன்றைய..பாடத்திட்டம் அந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.. இனி இந்த நிலை மாறினாலும் நாம் மதிப்பெண் எங்கே...என்றுதான் கேட்போமே தவிர நம் குழந்தைகளின் தனிப்பட்ட திறமையை எங்காவது ஊக்குவித்துலள்ளோமா??? உலகிலேயே எல்லா கல்வியாளர்களாளும் பெரிதும் பாராட்டப்படும் NCRT-கல்வி முறைக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு தெரிவிக்கிறோம் ???
அடிப்படை கல்வி முழுமை அடைந்தால் அந்த மாணவன் எதிர்காலத்தில் மிக அருமையாக மிளிர்வான்... அதை எந்த கல்வி நிறுவனம் முழுமையாக...சுயநலம் இல்லமால் செய்கிறது??எல்லாம் பணம்..பணம்..பணம்... இன்றைய கால கட்டத்தில் இத்தனை "கல்வி தந்தைகள்" உருவாக நாம் எல்லாருமே காரணம்...
நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிதரும்போது கூட--இந்த கேள்வியை படி.. இதற்க்கு பதில் சொல்லு...இப்படிதான் படிக்க வைக்கிறோம். நம்மில் எத்துனை பேர்.நம் குழந்தைகளுக்கு வாழ்க்கை கல்வியை போதிக்கிறோம் ...???
அனுபவரீதியான பாடங்கள் மற்றும் சுய படைப்பாற்றல் ( SELF CREATIVITY ) எத்தனை குழந்தைகளுக்கு கிடைக்கிறது??? நன்மை கேட்டால்--வகுப்பு பாடம் என்பது நம் குழந்தைகளை அறிவு மழுங்க செய்துவிடும் என்பது திண்ணம்.. வகுப்புடன் கூடிய,,அனுபவரீதியான பாடம் ,,குரூப் டிஸ்கஷன்,, சுய படைப்பாற்றல்,,விளையாட்டு,,விளை யாட்டின் முலம் பாடம்,, இப்படி முயற்சி செய்தால் எதிர் கால சந்ததியினர்..எல்லா துறையிலும்.. மற்றும் உலகத்தினறோடு போட்டி போட முடியும்...
எனவே நண்பர்களே..நாம் தான்--நம் குழந்தையின் எதிர்காலம் பற்றி கவலை படுபவர்கள்...அவர்களின் நாள் வாழ்வுக்காக நாம் நம்மை அர்ப்பணிப்போம்...
அவர்களின் பாடதிட்டத்தில்...நம்மை ஈடுபடுத்திக்கொண்டு ...அவர்களுக்கு அனுபவம் சார்ந்த,,ஊக்குவிப்பு சார்ந்த,,,மனனம் இல்லாத.. படித்தலை ஒரு சுவையான அனுபவமாக கொண்டு செல்லுங்கள்...
இந்த முறையில் உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளை பயிற்றுவித்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகள்...எதிர்காலத்தில் பேர் சொல்லும் அளவுக்கு வளருவார்கள்...
அடுத்து
போட்டி தேர்வுக்கான டிப்ஸ் :-
அன்பர்களே பொதுவாக நாம் போட்டி தேர்வுக்கு,,மற்றும் பள்ளி தேர்வுக்கு படிக்கும்போது கேள்வி--அதற்கு நான்கு பதில்கள்...அதில் சரியானவற்றை தேர்ந்தெடுப்பது ...இது தான் நடை முறை...இதை ஒரு உதாரணம் முலம் பார்ப்போம்...
காகசஸ் மலை---
1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கு பகுதி.
3. கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது.
4. ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது.
இந்த கேவிக்கு விடை என்று பார்த்தால் 3.
அவ்வளவு தானா???
இந்த ஒரு கேள்விக்கு பதில் தெரிந்து விட்டது...
நாம் அடுத்த கேவிக்கு செல்வோம் என்று போய்விடுவீர்கள்....
இந்த கட்டுரையின் நீளம் கருதி சுருங்க பார்ப்போம்....
பொதுவா...கேவிக்கு என்ன பதில் என்று பார்ப்பதைவிட
பதிலுக்கு கேள்வி தேடுங்கள்...
மேலே உள்ள கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள்...
1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது.
இதற்கு கேள்வி தேடுங்கள்...
திபெத்துக்கு வடக்கில் என்ன உள்ளது...??
மற்ற முன்று திசையிலும் என்ன உள்ளது ???
அது தொடர்பான தகவல்கள் என்ன என்ன ???
இப்ப பாருங்க..ஒரு பதில்...அதற்க்கு உண்டான
கேள்விகள் பல...
இவற்றை தேடும்போது மறக்குமா???
அதே போல் மற்ற பதில்களுக்கும் கேள்வி தேடுங்கள்...
எவ்வளவு விஷயங்கள் நீங்கள் கற்று கொள்வீர்கள்....
இதை மேலும் இந்த படம் முலம் விளக்குகிறோம்..
இங்கு பொதுவாக நாம் படித்து கொண்டு போவது கீழிருந்து மேலாக... அப்படி போகும்போது
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் படிப்பதும் நினைவில் நிற்காது...அதற்கு மேல் படிக்கவும்
ஆர்வம இருக்காது...
அதாவது...மரம்,,முக்கிய கிளைகள்--கேள்வி என்று வைத்துக்கொண்டால்,, இலைகள் பதில்கள்... இந்த முறையில் நாம் போட்டி தேர்வுக்கு தயார் ஆகும்போது நாம் பாதிக்கு மேற்பட்ட பாடங்களை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது...முழுமையாக படித்து முடித்து...நினைவில் வைத்துக்கொள்வது மிகுந்த சிரமம்...
அதே இந்த முறையில் முயற்சி செய்யுங்கள்...
அதாவது...
இலைகள் முலமாக (விடைகள்)--கேள்விக்கு வாருங்கள்...
நீங்கள் அனைத்து பாடத்தையும் COVER செய்து விடுவீர்கள்....
படம் பார்க்கவும்...
என்ன அன்பர்களே...இந்த டிப்ஸ் பிடித்துள்ளதா...ஆம் எனில் இந்த முறையை நீங்களும் பின்பற்றுங்கள்...அனைவருக்கும்...சொல்லி தாருங்கள்...
( படம் உதவி--வீடு--சுரேஷ் குமார் )
0 கருத்துரைகள்:
Post a Comment