மண்ணும் புழிதியும் அமைதியாய்,
மரமும் மைதானமும் ஏக்கமாய் ,
பிஞ்சு கால்களும் நெற்றி வியர்வையும்,
தொட்டுப் போகாதப் பட்டுப் போன செடிகளும்!
பம்பரமும் கில்லியும் திரையோடு வருவதில்லை ,
வெயிலும் மழையும் வரவேற்பறையை நனைப்பதில்லை ,
பக்கத்து விட்டு பையன் பெயரும் தெரிவதில்லை ,
எங்கோ ஒரு கற்பனை நகரத்தில் ஒவ்வொரு
சந்திலும் ஓடிக்கொண்டு இருக்கிறான்!
பள்ளி விட்டு ஓடிவந்து அன்னை முகம்
கெஞ்சி விட்டு தெருவில் இறங்கி
நட்பின் கைகோர்த்து விளையாடி அளண்டு
உறங்கி போகும் சுகம் தருமா ? திரையில் விளையாட்டு !
ஏக்கம் தரும் ஆண்டு விடுமுறைகள் ,
எப்போதாவது வரும் திரைப்படங்கள்,
தினமும் எதிர்நோக்கும் மாலை நேர விளையாட்டுகள் ,
எல்லாம் தின்றிருக்கிறது வண்ணத்திரை !!!!
-வித்யா.
0 கருத்துரைகள்:
Post a Comment