"உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்"
இது ஔவையார் வாக்காக கூறப்படுகிறது. ஒருசமயம்
அரசவை புலவர்களிடம் அரசர் விடிவதற்குள் நான்கு கோடி பாடல்கள் பாடவேண்டும் என கேட்டுக்கொண்டார் அதை அறிந்த ஔவையார் புலவர்களின் கவலையை தீர்க்க பாடிய பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. "மதியாதார் முற்றம் மதித்தொரு காற்சென்று
மிதியாமை கோடி பெறும்"
2. "உண்ணீ ருண்ணீரென் றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"
3. "கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"
4. "கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"
இதில் மனமுவந்து சாப்பிடுங்கள் என இன்முகத்துடன் ஊட்டாதவர்களது வீட்டில் உண்ணாமல் இருப்பது மிகச்சிறந்தது என எடுத்துரைக்கிறார்.
படித்ததில் பிடித்தது!
நன்றி: தினமலர் தீபாவளி மலர் சிறப்பு புத்தகம்.
mikavum perumathiyanathu
ReplyDelete