ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில் விண்ணில் பறக்கும் மயிற்பொறி ஒன்றைச் சச்சந்தன் வடிவமைத்தான். அதனை இயக்கும் முறையைத் தன் மனைவி விசையைக்கு கற்றுத் தருகிறான். இம்மயிற் பொறியில் தப்பித்துச் செல்லும் விசையைக்கு இயக்கத் தெரியாததால் மயானத்தில் இக்கருவி இறங்கி விடுகிறது.
இராம காதையில் இடம்பெறும் புஷ்பக விமானம் விரைவாகவும், அதிக நபர்களைச் சுமந்தும் நீண்ட தூரம் செல்லும் தன்மை உடையதாகும். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான ஆகாய விமானம் போன்று இலக்கியத்திலும் சுட்டப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நூற்றாண்டை ஆளும் சக்தி மிகுந்த ஆற்றல் பிரிவாக அணுவியல் திகழ்கிறது. அறிவியல் கண்டுபிடிக்கும் முன்பும் பின்பும் தமிழ் இலக்கியத்தில் அணுவைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டி குறுகத் தறித்த குறள்”
என்பது ஒளவை வாக்கு.
1803-ஆம் ஆண்டுதான் ஜான் டால்டன் என்பவர் அணுக்கொள்கையை வெளியிட்டார். தாம்சன், அர்னால்டு, ரூதர் போர்டு, ஜேம்ஸ் சாட்விக் என்பவர்கள் அணுவின் மையத்தில் உள்ள நியூக்ளியஸைச் சுற்றி எதிர் மின்துகள்கள் சூழல்கின்றன என கண்டறிந்தார். அணுவைப்பற்றி பல இலக்கியங்களில் பாடப்பெற்றுள்ளன.
“சாணிலும் உளன் ஓர் தண்மை
அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன்” – கம்பன்
“அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்களுள்ளும் புறம் புங்கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் அறிந்த நல்லோர்” – பரஞ்சோதி
“இடையின்றி அணுக்கள் எல்லாம் சுழலும் என
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்” – பாரதி
இவ்வாறு அணுவின் தன்மைகளை அன்னைத் தமிழ் குறிப்பிட்டுள்ளது. பாரத தேசம் எனும் பாடலில் பாரதியின் பொறியியல் அறிவு புலனாகிறது. சிங்களத் தீவிற்குப்பாலம் அமைத்தல், வங்கத்தில் வரும் நீர்ப்பெருக்கை மைய நாடுகளுக்கு பயன்படும் வகையில் நதிநீர் இணைப்பை பற்றிப் பேசினான். 1974-76ல் மைய அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த கே.என்.இராவ் கங்கை காவிரி திட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் பல அறிவியற் கூறுகள் அடுத்த பதிவுகளில் தொடரும்...
நன்றி: பிறதுறைத் தமிழியல்.
0 கருத்துரைகள்:
Post a Comment