•ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களே யொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.
•வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும்,
பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும்
வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
•எவனொருவன்
தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும்
சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர
மனிதன்.
•நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு;
இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர
வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
•சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத்
தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின்
நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான
ஜனநாயகம் ஆகும்.
•உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க
முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான்
கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
•ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
•சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
•முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள
வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில்
மகத்தான புரட்சி என்பனவாகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment