நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Saturday, April 14, 2012

மதுரை வெள்ளி வீதியார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் . என்ன விசேஷம்?


'இன்னைக்கு ஸ்கூல் போகணுமா?' என்று யோசிக்கும் மாணவர்கள் மத்தியில், சந்தோஷமாகப் பள்ளிக்குக் கிளம்புகிறார்கள் மதுரை வெள்ளி வீதியார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். என்ன விசேஷம்? ''உங்க பிள்ளைங்க வெளிநாட்டில் அந்த ஊர் பாஷையில் படிச்சா எப்படி இருக்கும்? அந்த வசதியை வெளிநாட்டு ஆசிரியர்களைவைத்து, நாங்க ஏற்பாடு பண்ணி தர்றோம்'' என ஆச்சர்யப்படுத்துகிறார் கணித ஆசிரியர் ஆறுமுகசாமி.

 'இந்தப் பள்ளிக்கும், புராஜெக்ட் அப்ரோட் என்கிற நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் இருக்கு. அதன்படி ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு நாட்டில் இருந்து அனுபவமுள்ள இரண்டு ஆசிரியர்களை இங்கே பாடம் நடத்த அனுப்பிவைப்பாங்க. அவங்க இதைச் சேவையா பண்றாங்க. இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், இப்படிப் பல நாடுகளில் இருந்து கடந்த ரெண்டு வருஷத்துல 25 வெளிநாட்டு ஆசிரியர்கள் வந்திருக்காங்க'' என்றவரை ''சார்.. கேப்ரியல் மிஸ் பற்றி நான் சொல்லட்டா?''  என்று இடைமறிக்கிறாள் எட்டாவது படிக்கும் ஐஸ்வர்யா.
 
'கேப்ரியல் மிஸ்ஸை எனக்கு ரொம்பப் பிடிக் கும். டிராயிங் வரைய சொல்லித் தர்றதுக்காக இங்கே வந்தாங்க. நம்ம முகத்தை நாமளே கண்ணாடி பார்த்து வரையறது, கிராஃப்ட் வொர்க் பண்றது, கிளாஸ் ரூமை அழகா வெச்சிக்கிறதுனு நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. எங்களை நாங்களே வரைஞ்சதை கிளாஸ் ரூம்ல ஒட்டச் சொல்லி எங்களை என்கரேஜ் பண்ணாங்க' என்கிற ஐஸ்வர்யாவின் முகம் முழுக்க மகிழ்ச்சி.

''ஸ்வீடன் லாங்குவேஜ்ல எப்படி குட்மார்னிங் சொல்றது, ரோபோட்டை எப்படித் தயார் செய்றாங்க, வெளிநாட்டுக் குடியுரிமை... இப்படி நிறைய

சொல்லிக்கொடுத்தாங்க'', ''நிறுத்தி வெச்சிருக்கிற ஏணிக்கு அடியில போனா ஸ்வீடன் நாட்டில் கெட்ட சகுனமாம்'', ''கைடோஷி சாவானு ஒரு ஜப்பான் சார் சுனாமி பற்றியும், ஜப்பான்ல ஆறு மாசத்துக்கு ஒரு தடவை நடக்கிற லோக்கல் எலெக்ஷன் பற்றியும் சொல்லிக்கொடுத்தார்'',  ''டென்மார்க்ல 18-வது பர்த்டேவும், ஜப்பான்ல 15-வது பர்த்டேவும் ரொம்ப ஸ்பெஷலாம்!'' ஒவ்வொரு மாணவியின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளனர் வெளிநாட்டு ஆசிரியர்களும் அவர்கள் எடுத்த பாடங்களும்!

மாணவிகளின் ஃபேவரைட் ஆசிரியர் கேப்ரியலிடம் பேசினோம். ''எனக்கு இந்தக் குழந்தைகளை ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லோரும் ரொம்ப ஆர்வமா கத்துக்குறாங்க. அதே மாதிரி மதுரையும் எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா எங்கே பார்த்தாலும் ஒரே கூட்டமா இருக்கு. அதான் ஏன்னு புரியலை!'' என்கிறார். அது எங்களுக்கே புரியலை மேடம்!

-மோ.கிஷோர்குமார், படங்கள்: பா.காளிமுத்து
* என் விகடன் - மதுரை

0 கருத்துரைகள்:

Post a Comment