குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து போடுங்க.... மறக்காதீங்க!........
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து 2-வது தவணையாக நாளை வழங்கப்படுகிறது.
முதல் கட்டம்
இளம்பிள்ளை வாதம் தாக்காத வகையில் ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து
5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் பிப்ரவரி
மாதம் 19-ந் தேதியன்று முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மொத்தம் 17 கோடி குழந்தைகளுக்கு இம்மருந்து வழங்கப்பட்டது. தமிழகத்தில்
மட்டும் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து போடப்பட்டது.
இரண்டாம் கட்டம்
இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 40 ஆயிரத்து 399 மையங்கள்
மூலம் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட
உள்ளது.
சென்னையில் 1126 மையங்களில் இம்மருந்து வழங்கப்பட உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு
மையங்கள், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில் போலியோ சொட்டு
மருந்து வழங்கப்பட உள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment