கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் வினா வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான விடையை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடையில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
வினா
வினா ஆறுவகைப்படும்
1. அறிவினா,
2. அறியாவினா,
3. ஐய வினா,
4. கொளல் வினா,
5. கொடை வினா,
6. ஏவல் வினா.
அறிவினா
தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது
ஆசிரியர் மாணவரிடம் கேட்பது
திருக்குறளை எழுதியவர் யார்?
அறியா வினா?
தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் மாணவர் ஆசிரியரிடம் கேட்பது
ஐயா, இதன் பொருள் யாது?
ஐய வினா
தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது
ஐயா, பாரிமுனைச் செல்லும் வழி இதுவா?
கொளல் வினா
ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல்
உப்பு உள்ளதா? எனக் கடைக்காரரிடம் கேட்டல்
கொடை வினா
ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல்
காசு வேண்டுமா?
ஏவல் வினா
ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா
படித்தாயா?
விடை எட்டு வகைப்படும்.
1. கட்டு விடை,
2. மறை விடை,
3. நேர் விடை,
4. ஏவல் விடை,
5. வினா எதிர் வினாதல் விடை,
6. உற்றது உணர்தல்,
7. உருவது கூறல் விடை,
8. இனமொழி விடை.
கட்டு விடை
கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது. பாரிமுனைக்குச் செல்லும் வழி இதுதான்.
மறை விடை
கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்
நீ நீந்துவாயா? நீந்த மாட்டேன்
நேர் விடை
வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல்
நாளை அலுவலகம் செல்வாயா? செல்வேன்
ஏவல் விடை
கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல்
கடைக்கு செல்வாயா? நீயே செல்
வினா எதிர் வினாதல் விடை
கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது.
நீ தேர்வுக்குப் படித்தாயா? படிக்காமல் இருப்பேனா
உற்றது உரைத்தல் விடை
கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல்
நீ பாடுவாயா? பல் வலிக்கிறது.
உருவது கூறுதல் விடை
கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது
எட்டிக்காய் சாப்பிடுகிறாயா? கசக்கும்
இனமொழி விடை
கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது இனமொழி விடையாகும்
நீ ஆடுவாயா? பாடுவேன்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்
1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
சிலப்பதிகாரம் -மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும்.
அ. இரட்டைக் காப்பியங்கள் யாவை?
ஆ. இரட்டைக் காப்பியத்தை விளக்குக.
இ. இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.
ஈ. இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?
2. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
வேத மனத்திற்கு வித்தாவது ஆண்டாள் பாடிய திருப்பாவை ஆகும்.
அ. வேதமனத்திற்கு வித்தாவது எது?
ஆ. திருப்பாவையை எவ்வாறு புகழ்வர்?
இ. திருப்பாவையை எவ்வாறு போற்றுவர்?
ஈ. ஆண்டாள் பாடிய நூலை எவ்வாறு போற்றுவர்?
3. விடைக்கேற்ற வினாத் தொடரை தேர்க.
தமிழின் இனிமையை எவரும் மறுக்க மாட்டார்
அ. தமிழின் இனிமையை எவரே மறுப்பர்?
ஆ. தமிழின் இனிமையை மறுப்பவர் உண்டோ?
இ. தமிழின் இனிமையை மறுப்பவர் யாவர்?
ஈ. தமிழின் இனிமையை மறுப்பவர் இல்லை ஏன்?
4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
உழைத்தவர் உண்ண முடியும்.
அ. எதைச் செய்ய வேண்டும்?
ஆ. யார் உண்ண முடியும்?
இ. உழைத்தவர் உண்ண முடியுமா?
ஈ. உண்ண உழைக்க வேண்டுமா?
5. முருகன் சென்னைக்குச் சென்றான். இதற்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
அ. முருகன் எதற்கு சென்றான்?
ஆ. முருகன் எங்கு சென்றான்?
இ. முருகன் எப்படிச் சென்றான்?
ஈ. முருகன் யாருடன் சென்றான்?
விடைகள்:
1. A, 2. D, 3. C, 4. B, 5. B.
0 கருத்துரைகள்:
Post a Comment