நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Saturday, October 22, 2016

இயக்குநர்- இயக்குனர் எது சரி ? அறிவோம் தமிழ் இலக்கணம்:

இயக்குநர்- இயக்குனர் எது சரி ?

எப்பொழுது எழுதத் துவங்கினாலும் இப்படி இந்தச் சொல் வரும்பொழுது *ஓர் குழப்பம்* என்கிறார். ஓரளவிற்கு பிழையற எழுதக் கற்றவர்களும் கூட குழம்பும் இடமிது. ஆனால் இயக்குனரா? இல்லை இயக்குநரா? எது சரி என்று சொல்வதற்கு முன்னர் வேறொன்றையும் இங்கே சொல்லியே ஆக வேண்டும்.


*ஓர் குழப்பம்* என்று எழுதக்கூடாது. உயிரெழுத்திற்கு முன்பு தான் *ஓர்* என்று எழுதவேண்டும் மற்ற இடங்களில் ஒரு என்று தான் வரும். ஆக *ஓர் இரவு நேரத்தில்..* என்று எழுதலாம். ஆனால் அதுவே மாலைப் பொழுதைக் குறித்து எழுதுமிடத்து *ஒரு மாலைப் பொழுதில்..* என்று எழுதுவதே சரி.

அதுபோலவே உயிரெழுத்திற்கு முன்னர் *பேர்* என்றும் மற்ற இடங்களில் *பெரிய* என்றும் எழுத வேண்டும். இதனால் தான் பேராபத்து, பேரவை, பேரணி என்று எழுதுகிறோம் (பேர்+ஆபத்து, பேர்+அவை ,பேர்+அணி ). அதே நேரத்தில் புராணம் என்று வந்தால் அங்கே *பேர்புராணம் என்று எழுதுவது பிழை* என்பதால் *பெரியபுராணம்* என்றும் எழுதுகிறோம். பெரியகுளம், பேரரசன், பேரிடர், பேரிணக்கம், பேரியக்கம், பேருவகை என்றெல்லாம் எழுதுவதன் பின்னால் இருக்கும் உத்தி இதுவே.

இவ்வகையிலேயே முறையே உயிர் வந்தால் *ஈர்*,மற்ற இடங்களில் *இரு*. எ.கா-ஈருயிர், இருமுடி

சரி, இனி கேள்விக்கு வருவோம். *இயக்குநர்* என்பதே சரி.

வந்தனர், பாடினர், பேசினர், சென்றனர் என்ற இப்பதங்களில் வரும் *னர்* பன்மையைக் குறிக்கும். ஆனால் இயக்குநர் அப்படியல்ல. ஏவல் பொருளில் வரும் *வினைச்சொல்*லை *பெயர்ச்சொல்*லாக்குவதற்கு  *நர்* விகுதியைச் சேர்க்க வேண்டும். ஆக *இயக்கு+நர்* என்பதுதான் சரி. பெறுநர், ஓட்டுநர், ஆளுநர், மகிழ்நர், ஆக்குநர், வாழ்த்துநர் என்று இப்படி பற்பல சொற்களைச் சொல்லலாம்.

Tuesday, October 18, 2016

கணிதம் பற்றி தெரியுமா...?

அறிவியலின் அரசி கணிதம்

தென் அமெரிக்காவில் இருந்த பழம் மாயா மக்களின் எண்முறை
கணிதம் (Mathematics) என்பதுவணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில்,அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளை பிரதிபடுத்துகின்றன:
அளவு (quantity) - எண்கணிதம்
அமைப்பு (structure) - இயற்கணிதம்
வெளி (space) - வடிவவியல்
மாற்றம் (change) - பகுவியல் (analysis) -நுண்கணிதம்
ஆனால் இத்துடன் கணிதம் நிற்கவில்லை.

கணிதத்தில் பல்வகை நுட்பம் செறிந்த வடிவங்களைத் துல்லியமாக விளக்கலாம், அலசலாம். இப்படத்தைக் வரைபடமாகத் தரும் சார்பு:
பொருளடக்கம்
1 கணிதம் என்றால் என்ன?
2 தற்கால கணிதத்தின் விசுவரூபம்
3 கணிதக்கட்டுரை விமரிசனங்கள்
4 இந்தியக்கணித வரலாறு
5 தற்காலத்திய கணிதத்தின் வரலாறு
6 கணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்
 அளவு (Quantity)
 அமைப்பு (Structure)
வெளி (Space)
 மாற்றம் (Change)
 கணித அடித்தளங்கள்

கணிதம் என்றால் என்ன?
எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ(arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும்வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று.

தற்கால கணிதத்தின் விசுவரூபம்

கணிதவியலின் இன்றைய வெளிப்பாடுகளில் இவையெல்லாம் ஒரு கடுகத்தனை பாகம் தான். கணிதம் எண்களில் தொடங்கியதும், எண்களிலும் வடிவங்களிலும் சிறந்த மேதாவிகள் புகுந்து விளையாடின ஈடுபாடுகளினால் பெரிய மரமாக வளர்ந்ததும் உண்மைதான். ஆனால் அத்துடன் அது நிற்கவே இல்லை. இன்று ஒரு அரிய தத்துவ இயலாக, வானளாவிய மரங்கள் கொண்ட பரந்த, செழித்த காடாகவே விசுவரூபம் எடுத்து இன்னும் வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. கணிதமில்லாமல் இன்று வேறு எந்தத் துறையுமே முன்னேற முடியாது என்று சொல்லும் அளவிற்கு, கணிதம் எல்லாத் துறைகளிலும் உள்ளார்ந்து படர்ந்திருக்கிறது.

கணித விமரிசனங்கள் (Mathematical Reviews) என்ற ஒரு பத்திரிகை 1940 இல் ஒரு சில பக்கங்களுடன் தொடங்கி ஒவ்வொருமாதமும் கணிதத்தில் எழுதப்படும் புது ஆய்வுக்கட்டுரைகளை விமரிசிக்கவென்றே ஏற்படுத்தப்பட்டது. அது இன்று மாதத்திற்கு 2000 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான ஆய்வுப்பத்திரிகைகளிலிருந்து ஏறக்குறைய இருபது லட்சம் கட்டுரைகளின் விமரிசனத்தை கணிதப் பொக்கிஷமாகக் காத்து வருகிறது.

இந்தியக்கணித வரலாறு

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர்
என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தைதிருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நிலைநிறுத்தியுள்ளார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை.

தமிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை.
எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக்கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர்,பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர்.
வேதகாலத்துக்கணிதத்தின் கணிப்பு முறைகள்
சுல்வசூத்திரங்களின் வடிவியல்

சூனியமும் இடமதிப்புத் திட்டமும்

எண்களின் அடிப்படைகளைப்பற்றி ஜைனர்கள்
பாக்சாலி கையெழுத்துப்பிரதிகளின் சமன்பாடுகள்
வானவியல்
கேரளத்தில் நுண்கணிதத்தின் முதல் கண்டுபிடிப்புகள்
இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள்.

தற்காலத்திய கணிதத்தின் வரலாறு

14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன்,ஆய்லர், காஸ், கால்வா, ரீமான், கோஷி,ஏபல், வியர்ஸ்ட்ராஸ், கெய்லி, கேன்ட்டர்,ஹில்பர்ட், இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம்.

கணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்

கணிதத்தின் தற்காலப் பிரிவுகளைப் பற்றி பட்டியலிடவேண்டுமானால் அப்பட்டியலில் 100 தாய்ப்பிரிவுகளாவது இருக்கும். இப்பிரிவுகளுக்குள் மிகவும் வியப்பு தரும்உறவுகள் உண்டு. இவைகளிலெல்லாம் கணிதத்திற்கென்றே தனித்துவம் வாய்ந்தமரபும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுதான் கணிதத்தை மற்ற அறிவியல் துறைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பைதருக்கவியலும் ஆய்கின்றது. மேலும்புள்ளியியல் போன்ற நேரடியாகப் பயன்படும் கணிதத் துறைகளும் உண்டு

அளவு (Quantity)

எண்கணிதம்
அளவியல்
இயல்பெண்கள்
முழு எண்கள்
விகிதமுறு எண்கள்
மெய்யெண்கள்
செறிவெண்கள்

அமைப்பு (Structure)

இயற்கணிதம்
எண் கோட்பாடு
நுண்புல இயற்கணிதம்
குலக் கோட்பாடு (Group Theory)
Order theory

வெளி (Space)

வடிவவியல்
முக்கோணவியல்
வகையீட்டு வடிவவியல் (Differential geometry)
இடவியல்
பகுவல்

மாற்றம் (Change)
நுண்கணிதம்
திசையன் நுண்கணிதம்
வகையீட்டு சமன்பாடுகள்
இயங்கியல் அமைப்புகள் (Dynamical systems)
ஒழுங்கின்மை கோட்பாடு

கணித அடித்தளங்கள்

தருக்கவியல் (கணிதம்)
கணக் கோட்பாடு, கணம் (கணிதம்)
விகுதிக் கோட்பாடு (Category theory)

இலக்கமியல் கணிதம்

சேர்வியல்
கணிமைக் கோட்பாடு
வரைவியல் (Cryptography)
கோலக்கோட்பாடு (Graph theory)

Thursday, October 13, 2016

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்

பேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.


நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக் பயன்படுத்தவும் மற்றவர்களுக்குப் பார்த்தாலும் கண்டறிய முடியாத வசதியை Hardlywork.in எனும் தளம் தருகிறது. இது தோற்றத்தில் ஒரு எக்சல் ஷீட்டில் (MS-Excel Sheet) வேலை செய்வது போன்று காட்சியளிக்கும். ஆனால் இதில் உங்கள் Facebook NewsFeed, Wall, Messages, Likes, Comments என அனைத்தையும் எக்சல் ஷீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

hardlywork-app-use-facebook-in-excel-sheet-3

முதலில் Hardlywork.in தளத்திற்குச் சென்று ” Gimme dem spreadsheets” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் Facebook ஐடி / பாஸ்வேர்டு கொடுத்து Login செய்யவும்.

Also Read:  ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைக்க
 
அடுத்து உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை இந்த தளம் பயன்படுத்த அனுமதி கேட்கும். Okay பட்டனைக் கிளிக் செய்யுங்கள். இப்போது எக்சல் ஷீட் போன்று தளத்தில் தோன்றும். இதனைப் பயன்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.

hardlywork-app-use-facebook-in-excel-sheet-2

1. மூன்று வகையான Themes உள்ளன. (Mac,Excel 2003 and Excel 2007)
2. நண்பர்களைத் தேட Excel Functions bar இல் அடித்துத் தேடலாம்.
3. உங்களுக்கு வரும் Notification / செய்திகளைக் கிளிக் செய்து பார்க்கலாம்.
4. Load More பட்டன் மூலம் பழைய செய்திகளைப் பார்க்கலாம்.
5. Hover வசதி - செய்திகளுக்கு அருகில் மவுசை வைத்தால் அதிலிருக்கும் படங்கள் / வீடியோக்களை Preview பார்க்கலாம். Likes and Comments எண்களின் அருகே மவுசைக் கொண்டு சென்றால் யாரெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
6. இது தான் முக்கியமான செயல். யாராவது தீடிரென்று வந்து விட்டால் Space Bar ஐத்தட்டுங்கள். சாதாரண எண்கள், கணக்குகள் நிறைந்த எக்சல் பைலாக தளம் மாறிவிடும்.
7. இந்தத் தளத்திலிருந்து Logout செய்யப் பயன்படும்.