நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, February 22, 2012

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை.
முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

.. எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

தமிழ்நாட்டின் சிறப்புகள்.........

தமிழ்நாட்டின் சிறப்புகள்.........
****************************

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

... 2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....

ஒரு நாள் அட்டவணை :

(உயர்தர?) தனியார் பள்ளிகள் 100/100 எடுக்கும் முயற்சியில் பிழிந்தெடுக்கிறார்கள். பத்தாவது, பிளஸ் 2 படிக்கிற மாணவ மாணவிகள் ஒரு நாள் அட்டவணை :

1. அதிகாலை மூன்று மணிமுதல் ஆறு மணிவரை - முழுக்க முழுக்க மனப்பாடம் / ஒப்புவித்தல்.(கெமிஸ்ட்ரி, பயாலஜி மனப்பாடம் செய்ய்யப்படுவதை சற்றே நினைத்துப்பாருங்கள்).

2. பள்ளியில் செய்ய்யப்படும் கொடுமை தெரியும். தன் மகனையோ மகளையோ திடீரென உடல் நிலை சரியில்லைஎன்று போன் வந்தால் அழைத்துவரப்போயிருக்கிறீர்களா? இப்போது காட்சிகளை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். வகுப்பு வாசலில் பெண்ணென்றும் பாராமல் முட்டிப்போட்டு படித்துக்கொண்டிருப்பது, வகுப்பறைகளைக் கடக்கும் தருணங்களில் ஸ்கேலால் விளாசும் சத்தம், போதாக்குறைக்கு பிரேயர், என்சிசி என்று கிரவுண்டில் நிற்க வைப்பது, வெயிலில் ஓடவிட்டு தண்டனை கொடுப்பது, சக மாணவர்கள் முன்னால் அவதூறாகப் பேசி அடிப்பது, பெற்றோர்களை வரவழைத்துத் திட்டுவது...

3.வியர்வையில் தொப்பையாய் நனைந்து பள்ளி வேனிலிருந்து வெளியில் விழுந்தவுடன் டியூஷன்களுக்கு ஓடவேண்டும்..

4. பேனா மை தீர்ந்துபோகக்கூடிய அளவுக்கு ஹோம் வொர்க் எழுத வேண்டும். எழுதிக்கொண்டே பெற்றோர்களிடம் தினந்தோறும் பூசை வாங்க வேண்டும்.

5. திரும்பவும் அதிகாலை மூன்று மணி.

மனசாட்சி தொட்டு சொல்லுங்கள். இல்லை என்பீர்களா?

100க்கு 90 சதவீதத்தினர் சந்தோஷமான மன நிலையில் பள்ளிக்கூடம் செல்லவில்லை; சந்தோஷமாகவும் வீட்டுக்கு வருவதில்லை.

மதிப்பெண் துறத்தும் மன அழுத்தத்தால், தனியார் பள்ளிகள்தான் நல்வாழ்வு பெறும்!

கூடவே கொலைகளும் கொலைகளும் அதிகரிக்கும்!!

"ரத்தவெள்ளத்தில் ஆசிரியை பிணமும், கொலைகாரனாக ஒரு குருத்தும்!"

நாம் வாழும் புற சூழல்தான், கருத்து,சிந்தனை,பண்பாடு-கலாட்ச்சாரம் இவைகளின் உருவாக்க களம்.இது பல கட்டங்களாக மாறியும்,வளர்ந்துகொண்டுமே வந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் அல்லவை நீடித்தும் அல்லாதவை கழிந்துமே இந்த வளர்ச்சி இருந்துகொண்டு இருக்கிறது.அது தானாக நிகழ்வதில்லை என்பதும் மனிதன் அதன் மீது தனது இயக்கு சக்தியை செலுத்துகிறான் என்பதும் உண்மை.
இன்று நாம் வாழும் சூழல்,உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் என்கிற உற்பத்தி-பரிவர்த்தனையை நோக்கிய ஒருங்கிணைந்த உலகமாக மாற்றும் முயற்சின் காலம் இது.இந்த முயற்சியில் பொருளாதார தாக்குதல்களை சந்திக்கிறோம்,அரசியல்தரம் மேலும்-மிகமேலும் சீரழிந்து நம்மீது ஏறி மிதிப்பதை சந்திக்கிறோம்,நமது போற்றுதலுக்கு உரிய கூட்டுக்குடும்ப உறவுகள் கொஞ்சம்-கொஞ்சமாக குறைந்து வருவதை சந்திக்கிறோம், முழுமையாக திறந்துவிடப்பட்ட கதவுகளின் வழியே மேற்கத்திய நுகர்வு கலாச்சாரமும், நாம் உள்வாங்க முடியாத (ஒவ்வாமை ஏற்படுத்துகிற) பண்பாட்டு தாக்குதல்களை சந்திக்கிறோம்,
இவைகள் அனைத்தும் நடுத்தர வர்க்க பகுதியினர்-கருத்தால்-கரத்தால் உழைக்கும் பகுதியினரை நாளைய நிலை என்ன என்று கானல் நீரை நோக்கி ஓடும் மான்களைப்போல் ஒட்டவைத்துக்கொண்டு இருக்கிறது.இவைகளின் மன அழுத்தம், ஆன்மீக-லௌகீக-வணிக-மற்றும் கல்வி,சுகாதாரம்,தொழில் உற்பத்தி உறவுகள் அனைத்திலும் மோசடியாளர்கள்-சமூகவிரோதிகள் இவர்களிடம் தஞ்சம்புக வைக்கிறது. தரம்தாழ்ந்த-மோசடி அரசியல்வாதிகள்,லஞ்சத்திற்கும்,ஊழலுக்கும் வழிகாட்டும் அதிகார வர்க்கத்தினர்,சாமியார்கள் பிழைக்க தெரிந்தவர்கள் என்றும்,நேர்மையான அரசியல்வாதிகளும்,அதிகாரவர்க்க பகுதியினரும் பிழைக்கத்தெரியாதவர்கள் என்று அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகின்றனர்.நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் அரசியலை - அது சாக்கடை என்று மக்களை ஒதுங்க செய்கிறது.
இவை அனைத்தும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும்,அனைத்தையும் லாபம் கொழிக்கும் தொழிலாக பாவிப்போரிடமிருந்து ஊழியர்களுக்கும் மன அழுத்தங்களாக ஏறி அமுக்குகிறது.வன்முறை-அடிதடி-ஒருதனி மனிதன் 100 பேரை ரத்தம் காக்க அடித்து சாகாடிப்பது,கொலைவெறி பாடல்களும்,குத்துப்பாடல்களும் கொண்டாட்டம் போடுவது இவைகளும்,பெண்ணுக்கு பணம் கொடுத்து பரிசம் போடுதல் என்பது மாறி வரதட்சணைகள் என்று திருமணங்களையும் வியாபாரமாக்கி இருப்பது, பெண்களை சிசுவிலேயே கொலை செய்வது இதுபோன்ற சமூக சீர்கேடுகள் அதிகரித்து தொடர்வாது இவை அனித்தும் இன்னும் பலவும் நாம் வாழும் சமூக சூழல். இவைகளுக்கு மிகப்பெரும் பங்குதான் ஒரு தளிரை கொலைகாரன் ஆக்கிஇருக்கிறது.தாய்க்கு ஈடான ஒரு ஆசிரியை கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்.
நமது வெறுப்பும்,கோபமும் இந்த சீரழிந்த சமூகம்-வியாபாரமாக்கப்பட்ட கல்விமுறை இவற்ற்றை மாற்ற வேண்டும் என்ற உந்து சக்தியாக இருக்குமானால், அதுவே அந்த தளிருக்கு நாம் கட்டும் பரிவும், தாயாகிய அந்த ஆசிரியைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கமுடியும்..

Sunday, July 24, 2011

ஒரு இணைய தமிழ் புரட்சி தேவை ...ஒன்று சேருங்கள் ...




தமிழ் இணைய உலகில் ஒரு நல்ல முயற்சி...
அனைவரும் அவரவர் நிலையில் தங்களின் பங்களிப்பை செய்யலாமே  .

............................................

எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள் ..

இந்த பதிவை எவளவு தூரம் கவனிக்கக் போகிறீர்களோ அல்லது  அனைவரிடமும் சேர்க்க போகிறீர்கள் என்று தெரியவில்லை .எத்தனை பேர் இதில் இணைய முன் வந்து நிற்க்க போகிறீர்களோ தெரியவில்லை .ஆனால் தயவுசெய்து ஒரு 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் .  http://www.ewow.lk/ தளம் பற்றியது .
கல்வி ,வேறு தொழில் நடவடிக்கைகளுடன் இதையும் இயக்குவதால் எம்மால் முழுநேரமாக தனியாக செய்ய முடியாது . ஆனால் அனைவரும் நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் முடியும் .
ஒரு சமூகத்தின்/மொழியின் வளர்ச்சி அதன் பரிணாம வளர்ச்சியில் தான் இருக்கிறது . அந்த அந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து வளர்ச்சியடையவேண்டும் .இணையத்தில் தமிழை தொகுப்போம் .
ஒரு சமூகம் வளர்ச்சி அடைய அந்த சமூகத்திலேயே இருந்து நன்றாக வந்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு மிக மிக முக்கியமானது .ஆனால் எம் சமூகத்தில் உள்ளவர்கள் வளர்ந்தவுடன் தன் சமூகத்தை திரும்பி பார்ப்பதில்லை என்ற எண்ணமே நிலவுகிறது . முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் .மிகவும் பின் தங்கி இருக்கிறோம் .நிச்சயம் ஒரு இணைய தமிழ் புரட்சி தேவைப்படுகிறது. அதற்கான வேண்டுகோள் பதிவு இது .ஒன்று சேருங்கள் .
இணையம் என்பது எதிர்காலத்தில் ஏழை ,பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க போகும் ஒன்று . உலக விடயங்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலமும் பகுத்தறிவை வளர்ப்பதன் மூலமுமே எமது சமூகத்தை வளர்க்க முடியும் . அனைவருக்கும் அனைத்திலும் அடிபப்டை அறிவு இருக்க வேண்டும் .கல்வித்தளம் /விழிப்புணர்வு தளம் என்று எந்த வகையிலும் வைத்திருக்கலாம் .
முதலில் வெறுமனே அறிவியல் கட்டுரைகளை மட்டுமே நானும் எனது நண்பன் பிரபுவும் எமது வலைப்பதிவுகளில் கிடைக்கும் நேரங்களில் படித்தவற்றை பகிர்ந்து /எழுதி வந்தோம் . அறிவியல் விடயங்கள் தமிழில் இணையத்தில் தேடினால் கிடைக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்காக இருந்தது .இருவரும் எழுதியதை இணைத்து ஒரு தளமாக்கி தொடர்ந்து எழுவது தான் நோக்காக இருந்தது .
ஆனால் பொதுவாக பார்த்தபோது அறிவியல் விடயம் மட்டுமன்றி கல்வி தொடர்பான எதுவுமே இணையத்தில் தமிழில் இருக்கவில்லை .வளர்ச்சி என்றால் அது அறிவியலில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் இருக்க வேண்டும் என்று தோன்றியது .
அதற்காக உருவாக்கப்பட்ட தளம் தான் இது :: http://www.ewow.lk/

இந்த தளத்தில் இணைந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்ய  விரும்புவர்கள் info@ewow.lk தொடர்புகொள்ளவும் .
இதன் உள்ளடக்கங்கள்::எந்த பகுதிக்கும் பங்களிப்பு செய்யலாம் .
கல்விப்பகுதி : இரசாயனவியல் ,பௌதீகவியல்  பாட பகுதிகள் வீடியோ வடிவில் விளங்கப்படுத்தபட்டுள்ளன .: இவை இன்னும் சேர்க்க வேண்டும் .எங்கிருப்பவர்களும் இவற்றை படித்துக்கொள்ளலாம் .
தமிழில் இயங்கவில் ஆவர்த்தன அட்டவணை 
ஏன்? எதற்கு ? : ஏன் என்ற கேள்வி மிகவும் முக்கியமானது .இந்த பகுதியை தொகுத்து வருகிறோம் .உங்களுக்கு தெரிந்தவற்றை மூலத்தை குறிப்பிட்டு பகிரலாம்.
சுகாதார கல்விகளையும் வீடியோ வடிவில் தொகுத்துள்ளோம் .வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்கள் எப்படி ஏற்படுகிறது ?அதை தடுப்பது பற்றி சுகாதார விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது .ஆக்கங்கள் கேள்வி பதில்களாக உள்ளது .
  
அனைவரும் அடிப்படை சட்டங்கள் தெரிந்திருக்கக் வேண்டும் என்ற நோக்கில் சட்டங்கள் பற்றிய விடயங்களை தொகுக்கிறோம் .மனித உரிமை சட்டங்களையும் தொகுக்கலாம் .
தமிழ் ஆவணப்படங்களும் செய்து வருகிறோம் .
அது தவிர வரலாறு ,தொழிநுட்பம் ,நாகரிகம் என பல விடயங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது .ஆனால் நாம் அவற்றை வழங்கு விதமும் தொகுக்கும் விதமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் .
எமக்கு தெரிந்தவற்றை மற்றயவர்களுக்கு தமிழில் கற்பிப்போம்,மற்றவர்களுக்கு தெரிந்ததை நாம் தெரிந்துகொள்வோம். தானாக இணையத்தில் தமிழ் சேர்ந்துகொண்டிருக்கும் .
நண்பர்களுடன் ,சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாலே உதவியாக இருக்கும் .. இப்படியான பணிகளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை இந்த செய்தி போய் எட்டினால் போதுமானது .
......................................................................
 
மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
 
அனைவரும்  பங்களிப்பை தருவீர்கள் என நம்புகிறேன்.  

உங்கள் நோக்கம் வெற்றி  பெற  வாழ்த்துக்கள் .

நன்றி
 
அன்புடன்
தேவமதி

Tuesday, July 12, 2011

இறைவன்

இருப்பவனிடத்தில் 
பணமாய்
இல்லாதவனிடத்தில்

குணமாய்

தமிழன்

தமிழைக்கூட 
தாரை வார்ப்பான் 
தமிழன் 
தகுந்த விலை 
தரும்போது ...