நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Monday, April 2, 2012

பன்றி காய்ச்சல் பற்றிய விவரமும் அதனை தடுக்கும் முறைகளும்..



ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்றக் கூடியவை.

கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இந்நோய் எப்படி பரவுகிறது?
இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமா கிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியு உள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொரு வரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

நோய் தாக்கியிருந்தால் அல்லது நோய் இருப்பதற்கான சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது..

நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ள வேண்டும். (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு பாதிக்கப்பட்டவரை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).

வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ள வேண்டும்.

தும்மும் போதும், இருமும் போதும் கைகளினால் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ள வேண்டும்..

நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் (அருகாமையில்) இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்..

உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.

மாஸ்க் அணிந்து பயணிக்கவும்.

மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்..

இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச் சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரி சோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும்..

நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?

தொடர்ந்து தலை வலி

குளிருதல், நடுங்குதல்

இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்

பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு

தலை சுற்றல் / மயக்கம்

பசியின்மை

உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி

இடைவிடாத காய்ச்சல்

வயிற்று போக்கு

வாந்தி எடுத்தல்

மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்

உயிரிழப்பும் ஏற்படலாம்


குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?
தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்

மூச்சு விட சிரமப் படுவார்கள்

உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்

தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்

அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்

தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்

தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்


இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப் படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.

வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.

இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன?

Chennai King Institute of Preventive Medicine (24/7 Service) Guindy, Chennai – 32 (044) 22501520, 22501521 & 22501522 Communicable Diseases Hospital Thondiarpet, Chennai (044) 25912686/87/ 88, 9444459543 Government General Hospital Opp.. Central Railway Station, Chennai – 03 (044) 25305000, 25305723, 25305721, 25330300 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------

Pune Naidu Hospital Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01 (020) 26058243 National Institute of Virology 20A Ambedkar Road , Pune – 11 (020) 26006290 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------

Kolkata ID Hospital 57,Beliaghata, Beliaghata Road , Kolkata - 10 (033) 23701252 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------

Coimbatore Government General Hospital Near Railway Station, Trichy Road , Coimbatore – 18 (0422) 2301393, 2301394, 2301395, 2301396 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------

Hyderabad Govt. General and Chest Diseases Hospital , Erragadda, Hyderabad (040) 23814939 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------

Mumbai Kasturba Gandhi Hospital Arthur Road, N M Joshi Marg, Jacob Circle , Mumbai - 11 (022) 23083901, 23092458, 23004512 Sir J J Hospital J J Marg, Byculla, Mumbai - 08 (022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366 Haffkine Institute Acharya Donde Marg, Parel, Mumbai – 12 (022) 24160947, 24160961, 24160962 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------ Kerala Government Medical College Gandhi Nagar P O, Kottayam - 08 (0481) 2597311,2597312 Government Medical College Vandanam P O, Allapuzha - 05 (0477) 2282015 Taluk Hospital Railway Station Road , Alwaye, Ernakulam (0484) 2624040 Sathyajit - 09847840051 Taluk Hospital Perumbavoor PO , Ernakulam 542 (0484) 2523138 Vipin - 09447305200 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------

Gurgaon & Delhi All India Institute of Medical Sciences (AIIMS) Ansari Nagar, Aurobindo Marg Ring Road , New Delhi – 29 (011) 26594404, 26861698 Prof. R C Deka - 9868397464 National Institute for Communicable Diseases 22, Sham Nath Marg, New Delhi – 54 (011) 23971272/060/ 344/524/449/ 326 Dr. Ram Manohar Lohia Hospital Kharak Singh Marg, New Delhi – 01 (011) 23741640, 23741649, 23741639 Dr. N K Chaturvedi – 9811101704 Vallabhai Patel Chest Institute University Enclave, New Delhi- 07 (011) 27667102, 27667441, 27667667, 27666182 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Bangalore Victoria Hospital K R Market, Kalasipalayam, Bangalore – 02 (080) 26703294 Dr. Gangadhar - 94480-49863 SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases Hosur Road , Hombegowda Nagar, Bangalore – 29 (080) 26631923 Dr. Shivaraj - 99801-48780 ------------ --------- --------- --------- --------- --------- --------- ------
நோய் நம்மையோ, நமக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469-மைத் தொடர்பு கொண்டால், நோய் பரவாமல் இருப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.

இந்த தகவலை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்


நன்றி : உதய்.

Sunday, April 1, 2012

ஜே.கே கூறினார் :



"உலகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்கள் தங்களுக்கிடையே அன்பும், பாசமும் கொண்ட நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்கள். அதுமட்டுமல்ல. மனிதர்கள் தங்களிடமே நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளாமல் தங்களுக்குத் தாங்களே விரோதிகளாக செயல்பட்டு வருகிறார்கள். கருத்துக்கள் (Ideas), கொள்கைகள் (Ideologies), நம்பிக்கைகள்(Beliefs), கடவுள்கள், மதங்கள், கட்சிகள், சொத்துக்கள், மனித இனம், உலகம் போன்றவற்றுடன் மனிதர்கள் எப்படிப்பட்ட உறவை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் உலகச் சூழ்நிலை அமைகின்றது.

நாம் சுயநலம், சுய இன்பம், பொறாமை, பயம் போன்றவைகளின் அடிப்படையில் உறவை வளர்த்துக் கொண்டிருப்பதினால் தான் உலகில் போர்கள், கலவரங்கள், அராஜகங்கள் போன்றவை தோன்றி மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. தயவு செய்து, "எப்படி செயல்பட வேண்டும்? எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்?" என்பதைப் போன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள். "எப்படி?" என்று நீங்கள் கேட்கும் போது யாராவது ஒருவர் உங்களுடைய பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழிமுறையோ அல்லது ஒரு பரிகாரத்தையோ உங்களுக்கு எடுத்துக் கூறப் போகிறார் என்று நீங்கள் எதிர்ப்பார்ப்பதைத்தான் அது குறிக்கிறது.


நீங்கள் மற்றவர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்து வருபவராக இருந்தால் உங்களால் ஒரு நல்ல வாழ்க்கையை கட்டாயம் அமைத்துக் கொள்ள முடியாது. எந்த ஒரு அறிஞரோ, மன இயல் நிபுணரோ அல்லது மதகுருவோ சொன்ன அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கண்டு வரும் பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. மாபெரும் அறிஞர்கள் எழுதிய விளக்கங்கள், புனித நூல்களில் காணப்படும் உபதேசங்கள், துறவிகள் செய்துவரும் பிரசங்கங்கள் போன்ற எதுவும் நீங்கள் கண்டுவரும் வேதனையிலிருந்து உங்களுக்கு விடுதலை வாங்கித் தரப்போவதில்லை.


நான் சொல்லும் இந்த விளக்கத்தை நீங்கள் உடனடியாக மறுக்கக் கூடும். ஆனால் நீங்கள் கருத்து நம்பிக்கை முடிவு போன்றவற்றைப் பயன்படுத்ததாமல் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும் போது தான் நான் சொன்னதில் இருக்கும் உண்மை உங்களுக்குத் தெரியவரும்.


- ஜே.கே

 
http://en.wikipedia.org/wiki/J_Krishnamurti -via  -தமிழச்சி

கண்ணுக்கே தெரியாத காற்றை விவரிக்க தமிழில் இத்தனை சொற்களா ?

 உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள் புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை !

நன்றி : தமிழறிவோம்.

கடலுக்கடியில் பூம்புகார்...

பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக...் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.


பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.



வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”



இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?



உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.



தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?



அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.



இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்



2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு



3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு



4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்



5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )



1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.



2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.



3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.



4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.



5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.



தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.



ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? # பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.



இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?



# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?



# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்
— with Arputha James 

இந்த முட்டாள்கள் தினம் (April fool) எப்படி வழக்கத்தில் வந்தது?



ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாக ஜூலியன் நாட்காட்டியைத்தான் பயன்படுத்தி வந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் நடுவில் கிரிகோரியன் நாட்காட்டி புழக்கத்தில் வந்தது. பழைய நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதத்தில்தான் புது வருடம் ஆரம்பம். ஆனால் புதிய நாட்காட்டியில் ஜனவரியிலிருந்து புது வருடம் கணக்கிடப்பட்டது.

இந்த மாற்றம் பல குழப்பங்களை உண்டு பண்ணியது. யாரெல்லாம் பழைய பஞ்சாங்கமாக இருந்தார்களோ அவர்கள் ‘முட்டாள்கள்’ என்று முத்திரை குத்தப் பட்டார்கள். காலப்போக்கில் இந்த தினம் மற்றவர்களை விளையாட்டாக, வேடிக்கையாக முட்டாள் ஆக்கும் தினமாக மாறி இன்றுவரை நிலைத்துவிட்டது.

இன்னொரு கதையும் வழக்கில் இருக்கிறது. ரோமானிய அரசன் கான்ஸ் டன்டைன் என்பவனது ஆட்சி பலத்த சர்ச்சைக்கு உள்ளானபோது, அவன் தனது அரசவை கோமாளி கூகல் என்பவனையும், தனது பழங்குடியின ரையும் ஒரு நாள் நாட்டை ஆளச் சொன்னானாம்.

கோமாளிகள் உண்மையில் மிகுந்த புத்திசாலிகள்; வாக்கு சாமர்த்தியத்து டன் கூடிய வேடிக்கை பேச்சுக்கள் பேசுவதில் சமர்த்தர்கள். ஆனாலும் அவர்களை அந்தக் காலத்தில் முட்டாள்கள் என்று அழைப்பது வழக்க மாக இருந்தது. கோமாளிகள் ஆட்சி செய்த அந்த ஒருநாள் தான் All Fools Day.

அப்போதிலிருந்து இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ‘முட்டாள்கள்’ தினமாக உலகெங்கிலும் மிகப் பெரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் ‘முட்டாள்கள்’ தினத்தில் நாம் யாரையும் முட்டாள்கள் ஆக்க வேண்டாம்.. நாமும் ஆகவேண்டாம்..

சரி அப்படியே முட்டாள்கள் ஆனாலும் சரி, பிறரை முட்டாள்கள் ஆக்கினாலும் சரி, மனம் புண்படாமல் பண்பாக விளையாடுவோம்.

முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!


தகவலுக்கு நன்றி : உதய்