நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Sunday, April 1, 2012

ஜே.கே கூறினார் :



"உலகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்கள் தங்களுக்கிடையே அன்பும், பாசமும் கொண்ட நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்கள். அதுமட்டுமல்ல. மனிதர்கள் தங்களிடமே நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளாமல் தங்களுக்குத் தாங்களே விரோதிகளாக செயல்பட்டு வருகிறார்கள். கருத்துக்கள் (Ideas), கொள்கைகள் (Ideologies), நம்பிக்கைகள்(Beliefs), கடவுள்கள், மதங்கள், கட்சிகள், சொத்துக்கள், மனித இனம், உலகம் போன்றவற்றுடன் மனிதர்கள் எப்படிப்பட்ட உறவை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் உலகச் சூழ்நிலை அமைகின்றது.

நாம் சுயநலம், சுய இன்பம், பொறாமை, பயம் போன்றவைகளின் அடிப்படையில் உறவை வளர்த்துக் கொண்டிருப்பதினால் தான் உலகில் போர்கள், கலவரங்கள், அராஜகங்கள் போன்றவை தோன்றி மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. தயவு செய்து, "எப்படி செயல்பட வேண்டும்? எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்?" என்பதைப் போன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள். "எப்படி?" என்று நீங்கள் கேட்கும் போது யாராவது ஒருவர் உங்களுடைய பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழிமுறையோ அல்லது ஒரு பரிகாரத்தையோ உங்களுக்கு எடுத்துக் கூறப் போகிறார் என்று நீங்கள் எதிர்ப்பார்ப்பதைத்தான் அது குறிக்கிறது.


நீங்கள் மற்றவர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்து வருபவராக இருந்தால் உங்களால் ஒரு நல்ல வாழ்க்கையை கட்டாயம் அமைத்துக் கொள்ள முடியாது. எந்த ஒரு அறிஞரோ, மன இயல் நிபுணரோ அல்லது மதகுருவோ சொன்ன அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கண்டு வரும் பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. மாபெரும் அறிஞர்கள் எழுதிய விளக்கங்கள், புனித நூல்களில் காணப்படும் உபதேசங்கள், துறவிகள் செய்துவரும் பிரசங்கங்கள் போன்ற எதுவும் நீங்கள் கண்டுவரும் வேதனையிலிருந்து உங்களுக்கு விடுதலை வாங்கித் தரப்போவதில்லை.


நான் சொல்லும் இந்த விளக்கத்தை நீங்கள் உடனடியாக மறுக்கக் கூடும். ஆனால் நீங்கள் கருத்து நம்பிக்கை முடிவு போன்றவற்றைப் பயன்படுத்ததாமல் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும் போது தான் நான் சொன்னதில் இருக்கும் உண்மை உங்களுக்குத் தெரியவரும்.


- ஜே.கே

 
http://en.wikipedia.org/wiki/J_Krishnamurti -via  -தமிழச்சி

0 கருத்துரைகள்:

Post a Comment