நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Friday, May 11, 2012

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!

அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தி நகரிலிருந்து இருந்து, 350 கி.மி. தொலைவில் இருக்கும் சாண்ட்பார் கிராமம்... தண்ணீர் பஞ்சம் காரணமாக, மரங்கள் உள்ளிட்ட தாவரங்கள் வெகுவாக குறைந்து போக... பாம்புகள், பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

அப்பகுதியைச் சேர்ந்த ஜாதவ் பயங், வனத்துறையினரிடம் சென்று இதற்கு ஏதாவது செய்யுங்கள் என்று முறையிட்டார். 'இந்தப் பகுதியில் மரங்கள் எதுவும் வளராது. முடிந்தால் நீ மூங்கில் வளர்த்துக் கொள்' என்று திருப்பிவிட்டனர். இது, அவரை வெகுவாக பாதிக்கவே, 'இந்தப் பகுதியிலேயே தங்கியிருந்து காட்டுப்பகுதியை உருவாக்கியே தீருவேன்' என்று சபதம் எடுத்தார். இது நடந்தது 1979-ம் ஆண்டில்! அப்போது அவருக்கு வயது 16.

தனி மனிதனாக மூங்கில் நட்டு, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து என்று அவர் களத்தில் சுழல... ஆரம்பித்தார். அடுத்து பல வகையான மரக்கன்றுகளையும் வெளியில் இருந்து வாங்கி வந்து நட்டார். சிவப்பு எறும்புகளையும் கொண்டுவந்து அங்கே வளர்த்தார். அவை, மண்ணின் தன்மையையே மாற்றி வளப்படுத்தும் என்பதுதான் காரணம்.

இந்த முயற்சிகளுக்கெல்லாம் அருமையான பலன்! ஆம்... நிறைய மரங்கள், மலர்கள், பூச்சிகள், உள்நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள், யானைகள், காண்டா மிருகம், மாடுகள், மான்கள் என்று வன விலங்குகளும் அங்கே பெருக... 12 ஆண்டுகளில் மாபெரும் காடாக மாறிப்போனது.

1,360 ஏக்கர் என்று பெருகிவிட்ட அந்த காடு... கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழித்து, கடந்த 2008-ம் ஆண்டில்தான் மாநில வனத்துறையின் கண்களுக்கே தெரிந்திருக்கிறது. இப்போது, 49 வயதாகும் ஜாதவ்வை பாராட்டிக் கொண்டிருக்கிறது வனத்துறை!

0 கருத்துரைகள்:

Post a Comment