நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, February 22, 2012

தாய்மொழி பேசு...

நீமட்டும் உன்னியல்பு எங்கனம் மறந்தாய் தமிழா?!...
தாய் மொழியை துச்சமென்றா துறந்தாய் தமிழா?!...
தாய்மொழி பேசு
குயில்கள் இரண்டு சந்திக்கையில் குக்கூவென்று கூவக்கேட்டேன்
காகம் இரண்டு சந்திக்கையில் காக்காவென்று கரையக்கேட்டேன்
எந்நாளும் அவை இந்நிலை மாறாதிருக்கக் கண்டேன்
எத்தேசம் சென்றிடினும் எந்நாளும் இதையே கண்டேன்.

நீமட்டும் உன்னியல்பு எங்கனம் மறந்தாய் தமிழா?!...
தாய் மொழியை துச்சமென்றா துறந்தாய் தமிழா?!...
சென்னையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹவ் ஆர் யூ”, என்றாய்
மும்பையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹைசே ஹை”, என்றாய்.

தாய் மொழி பேசுவது தவறென்றா நினைத்தாய்?...
உன் தாய்க்கே இழிநிலையை ஏன் கொடுத்தாய்?...
இரவல் சட்டை அணிவதை பெருமையென்றா நினைத்தாய்
கந்தலானாலும் சொந்தச்சட்டை பெருமை யென்பதையெப்படி மறந்தாய்.

உப்பிட்டாரை மறப்பதுவே தவறென்று எண்ணும் போது
உயிராய் உணர்வுதந்த தாய்மொழி மறப்பது சூது
உணர்வின்றி உயிர் இருப்பதில் என்ன மேன்மை
உணராது தாய்மொழி மறந்திட்டால், தமிழாநீ பொய்மை.

- சாரதாதேவி முத்துராமலிங்கம்
ஆய கலைகள் அறுபத்துநான்கு !!!
ஆய கலைகள் அறுபத்துநான்கு !!!

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) !!!

தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்குங்கள்

ஏழை மாணவர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுத்து தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும். அப்படி செய்தால் நமது இந்தியா அபரிதமான வளர்ச்சி பெறும். இதில் ஏழை மாணவர்கள் யார் யார் என்பதை தெளிவுபடுத்த விரும்பிகிறேன். சாதி, இனம், மொழி, மதம் என எந்த வேறுபாடின்றி எந்தப் பெற்றோரால் தன் குழந்தையைப் படிக்க வைக்க முடியவில்லையோ, அந்தக் குழந்தைகள் அனைவரும் ஏழைக்குழந்தைகளே. மத்திய, மாநில அரசுகளே எங்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம். பாரபட்சமின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்குங்கள் அதுபோதும்.

நாம் மாறத்தயாரா நண்பர்களே .....?


உண்மையான சுதந்திர இந்தியா...

பாலுக்கு அழும் குழந்தை..
கல்விக்கு ஏங்கும் மாணவன்..
வேலை தேடும் இளைஞன்..
வறுமையில் வாடும் தாய்..
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுதந்திர இந்தியா...
- மாவீரன் பகத்சிங்

மாணவர்களிடம் குறையும் கல்வித் திறன்...

மாணவர்களிடம் குறையும் கல்வித் திறன்...

இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைதான் உயர்கிறது. ஆனால் அவர்களது கல்வித் திறன் குறைந்து கொண்டே வருவதாகக் கூறும் ஆய்வை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.

6 முதல் 14 வயது உடைய மாணவர்களுக்கு புத்தகங்கள் படிப்பதிலும், கணிதத்திலும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது, தனியார் டியூஷன்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளியில் மாணவர்களின் வருகைப் பதிவும் குறைந்துள்ளது என்கிறது அந்த ஆய்வு.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கல்வித்திறன் குறித்து ஆய்வு நடத்தி கல்வித்திறன் அறியும் ஆண்டறிக்கை (ஏஎஸ்இஆர்) சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2011ம் ஆண்டு இந்தியாவில் கல்வித் திறன் எவ்வாறு இருந்தது என்பது குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார். அதில், துவக்கப் பள்ளிகளிலேயே கணினியை பயன்படுத்தும் முறை உயர்ந்துள்ளது. இந்தியாவில் 30% துவக்கப் பள்ளிகளில் கணினிப் பாடம் இடம்பெற்றுள்ளது. கேரளாவில் இது அதிகமாக (78.4%) உள்ளது. தமிழகத்தில் 51% அளவிற்குத்தான் கணினி பயன்பாடு உள்ளது. அதிலும் 7% அரசு பள்ளிகளில் மட்டுமே கணினி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல, கடந்த ஆண்டைக் காட்டிலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக மாணவிகளின் விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் (89.7%), இந்த ஆண்டில் (94.8%) உயர்ந்துள்ளது. அதிக மாணவிகள் சேர்க்கை உள்ள மாநிலங்களாக பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகியவை முன்னிலையில் உள்ளன. உத்திரப்பிரதேச மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பதாகும். அதாவது, 2006ம் ஆண்டில் 18.7% இருந்த எண்ணிக்கை தற்போது 25.6% உள்ளது. கேரளா, மணிப்பூர் மாநிலங்களில் 60% மாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றனர்.

இந்திய அளவில் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவும் 73.4% இருந்து 70.9% குறைந்துள்ளது. அதே சமயம், ஆசிரியர்களின் வருகைப் பதிவு 87% சதவீதமாக உயர்ந்துள்ளது.

தனியார், அரசு பள்ளிகள் என எந்த வித்தியாசமும் இன்றி டியூஷன் வகுப்புகள் அதிகரித்துள்ளன. 20% முதல் 25% மாணவர்கள் தனியாக பணம் செலுத்தி டியூஷன் வகுப்பில் சேர்கின்றனர். ஒடிசா, பீகார், மேற்கு வங்கம், கேரளாவில் டியூஷன் வகுப்புகள் அதிகமாக நடக்கின்றன.

இறுதியாக, கவலைக்குரிய அந்த தகவலையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, குழந்தைகளின் கற்கும் திறன் குறைந்து வருகிறதாம். அதாவது 2010ம் ஆண்டில் எடுத்த ஆய்வில் 5வது படிக்கும் ஒரு மாணவரால் 2ம் வகுப்பு புத்தகத்தை படிக்கும் திறன் 53.7% இருந்தது. இந்த திறன் தற்போது 48.2% குறைந்துள்ளது. விதிவிலக்காக குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் கல்வித் திறன் உயர்ந்துள்ளது சற்று நிம்மதியை அளிக்கிறது.

14 வயதுள்ள குழந்தைகளுக்கு கணிதக் குறியீடுகள் மிகக் கடினமாக இருப்பதும், 3ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், பக்கத்து எண்ணில் இருந்து கடன் பெற்று கழிக்கும் கணிதத்தை போடும் திறன் குறைந்திருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே கணிதத்தை 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் செய்யும் திறனும் 70.9% இருந்து 61% குறைந்துள்ளது. இதிலும், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மாணவர்களின் கணிதத் திறன் உயர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கல்வித் தரத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கற்கும் திறனை ஊக்குவிக்கும் விதத்தில் பாடப்புத்தகங்களும், ஆசிரியர்களும், வகுப்பறைகளும் மாற வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.

இதையும் அறிந்துகொள்வோம் ...

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்