நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Monday, April 2, 2012

தமிழகத்தில் பிறந்தஒரு மருத்துவ விஞ்ஞானியின் சாதனை..

டாக்டர் டார்வின் ஜெயராஜ் 36 வயது இளம் மருத்துவ விஞ்ஞானி. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நெல்லை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து, லண்டனில் எம்.ஆர்.சி.பி. முடித்து, அமெரிக்காவில் இதயநோய் மருத்துவப் பிரிவில் உயர் கல்வி பயின்று, கடந்த 10 ஆண்டுகளாக கேஸ் வெஸ்டர்ன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்

லப்...டப்...லப்...டப்...என்று ஒரே சீராக இதயம் துடித்துக் கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், இதயத்தின் தாளம் மாறும்போது மாரடைப்பு வருகிறது. பெரும்பாலும் இரவு அல்லது அதிகாலை வேளையிலேயே வரும் இதுபோன்ற எதிர்பாராத மாரடைப் பிற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார் டாக்டர் டார்வின் ஜெயராஜ்.

கடந்த மாதம் லண்டனிலிருந்து வெளியாகும் நேச்சர் (nature) என்ற மருத்துவ இதழில் வெளியான இவரின் ஆராய்ச்சி முடிவுகள் இதய மருத்துவத்தில் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவில் உள்ள case western மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் டார்வின் கூறுவதாவது.

‘அதிகாலை அல்லது இரவு நேரத்தில் எதிர்பாராமல் ஏன் மாரடைப்பு வருகிறது என்பதுதான் எங்கள் ஆராச்சியின் பிரதானப் பகுதியாக இருந்தது. இதில் உயிர்க் கடிகாரத்திற்கும் (biological clock) இதயத்தில் ஏற்படும் முறையற்ற மின் அதிர்விற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. உயிர்க் கடிகாரம் என்பது நம் உடம்பில் ஒரு டைம் கீப்பர்போல செயல்படும் விஷயம். இது இதயம் உட்பட உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். வெளிப்புறக் காரணிகளுக்கேற்ப (தூக்கம், சாப்பாடு) நம்முடைய நடத்தையைப் பல விதங்களிலும் ஒருங்கிணைக்கிறது. இந்த உயிர்க் கடிகாரம் என்பது எல்லா நேரத்திலும் சரியாகவே செயலாற்றும் என்று சொல்ல முடியாது.

உதாரணமாக, நீண்ட விமானப் பயணத்தின் முடிவில் அப்போதைய சூழலுக்கு உடனடியாக ஒத்துப் போக முடியாமல் உடம்பு ஜெட் லேக் ஆகிவிடுகிறது. வழக்கம்போல செயல்படுவதற்கு ஓரிரு நாட்கள் பிடிக்கும். வழக்கத்திற்கு மாறான சூழலில் உயிர்க் கடிகாரத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றம் இதய மின் அதிர்வுகளையும் பாதிக்கும். கேஎல்எப் 15 என்ற மரபணு மூலக்கூறு குறைவாக அல்லது அதிகமாக இருந்தால், உயிர்க் கடிகார மாற்றத்தால் ஏற்படும் மின் அதிர்வுகளை சமாளிக்க முடியாமல் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு பாதித்தவர்களை சோதித்தபோது கேஎல்எப் 15 குறைபாடு இருப்பதும் தெரிந்தது.

இப்போதைக்கு சுண்டெலிகளை வைத்து மட்டுமே செய்த ஆராய்ச்சியின் முடிவில் மிக முக்கியமான அடிப்படையான விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இந்த முடிவுகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆராயும்போது மேலும் உண்மைகள் தெரியவரலாம். மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்களை அறிய, உயிர்க் கடிகாரம் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. இதயத்தின் சீரற்ற மின் அதிர்வுகள் பற்றியும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். எங்களின் முயற்சி இதய நோய்ப் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.’

இவரது ஆராய்ச்சியை பாராட்டுவோம்..

http://www.newswise.com/articles/circadian-nitrogen-balance-impacts-survival-susceptibility-to-diseases

0 கருத்துரைகள்:

Post a Comment